உலக சாதனை படைத்த 1,483 பேர் வரைந்த அப்துல்கலாம் ஓவியங்களின் தொகுப்பு
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி ஆன்லைன் மூலம் 1,483 பேர் பங்கேற்று, ஓவியங்கள் தொகுத்து ஒன்றாக்கி நடைபெற்ற சாதனை முயற்சியை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.


சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் ஜாக்கி கிரியேஷன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி ஆன்லைன் மூலம் 1,483 பேர் பங்கேற்று, ஓவியங்கள் தொகுத்து ஒன்றாக்கி நடைபெற்ற சாதனை முயற்சியை அங்கீகரித்து அதற்கான சான்றிதழ் சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி மூலம் வழங்கப்பட்டது.
சீர்காழியில் உள்ள ஜாக்கி கிரியேஷன்ஸ் நிறுவனம் கையெழுத்து , ஓவியம், கைவினைப் பொருள்கள் செய்தல், ஆரத்தி தட்டுகள் செய்தல் போன்ற பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இந்த பொதுமுடக்க காலத்தில், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அதிக அளவிலான நபர்கள் கலாமின் ஓவியத்தை வரைந்து காட்சிப்படுத்தும் சாதனை முயற்சியை முன்னெடுத்து நடத்தியது. இதில் உலகெங்கிலும் இருந்து 1,483 ஓவியர்கள் ஆன்லைன் மூலம் கலந்துகொண்டு, தாங்கள் வரைந்த கலாமின் ஓவியத்தை அனுப்பி இருந்தனர்.
அக்டோபர் 15 கலாம் பிறந்த தினம் அன்று, 1,483 ஓவியங்கள் ஒன்றாக தொகுக்கப்பட்டு, ஆன்லைனில் ஒரே கலாம் உருவமாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த சாதனை முயற்சி, உலக சாதனைகளை பதிவு செய்யும் டிரம்ப் வேல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தால் புதிய உலக சாதனையாக அறிவிக்கப்பட்டு, அதற்கான விருது மற்றும் சான்றிதழ் சீர்காழி தொகுதி எம்எல்ஏ பிவி. பாரதி மூலம் ஜாக்கி கிரியேஷன்ஸ் நிர்வாக அதிகாரி த.எஸ்தரிடம் வழங்கப்பட்டது. அப்போது, தலைமை ஆலோசகர் ஜேக்கப் ஞானசெல்வன், ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உடனிருந்தனர். இது ஆன்லைனில் அதிகம் பேர் பங்கேற்ற சாதனை நிகழ்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...