/

7.5% உள் இடஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

மருத்துவப் படிப்புகளில் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு கட்ட வலியுறுத்தலுக்குப் பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மசோதா சட்டவடிவம் பெற்றது. 

தொடர்ந்து, 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை முன்வைப்பது தொடர்பாக பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.