விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் 69% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

​மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் பயன் பெறும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 நவம்பர் 2020, 2:44 pm

DIN


மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் பயன் பெறும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு - மிகவும் காலதாமதமாக இப்போது அ.தி.மு.க. அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அ.தி.மு.க. அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது.

இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உள் இடஒதுக்கீடு 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அ.தி.மு.க. அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள் இடஒதுக்கீடு என்று அறிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடியாத துரோகம். ஆகவே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்துகிறேன்." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.