/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாகச் சரிவு

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது 13,274 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,432 கன அடியாகச் சரிந்தது. 

News image
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாகச் சரிவு
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

தினமணி செய்திச் சேவை

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தானது 13,274 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,432 கன அடியாகச் சரிந்தது. 

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.21அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,274 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,432கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 58.80 டி.எம்.சியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 95.46 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 95.21 அடியாகச் சரிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.