இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடக்கம் 

புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :12 நவம்பர் 2020, 1:58 pm

DIN

புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்” என்ற பெயரில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்ப்படும் என்று புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி அவர்கள் சட்டப்பேரவையில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று (15-11-2020), காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா”, புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் -  நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன்,  பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில்   புதுச்சேரி, புதுச்சேரி-காரைக்கால் மாநிலக் கழக அமைப்பாளர்களான இரா.சிவா, எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், ஏ.எம்.எச்.நாஜிம் ஆகியோரும் மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.