தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

News image
புதுச்சேரி பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
Updated On :12 நவம்பர் 2020, 5:47 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ''புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும்.

இதன்படி சிற்றுண்டியில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்'' என்று அறிவித்தார்.

அதன்படி, சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், சட்னி- சாம்பார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை (நவ.12) காலை புதுச்சேரி காராமனிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான 
ஆர்.எஸ். பாரதி தொடங்கி வைத்தார். விழாவுக்கு புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி தலைமை வகித்தார். 

இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மாணவர்களுக்கு இட்லி, பொங்கல், கிச்சடி, சாம்பார் சட்னி வழங்கப்படுகிறது. 

மாகி பள்ளி மாணவர்களுக்கு உப்புமா, புட்டு, கடலை, உடைத்த கோதுமை உப்புமா, சட்னி வழங்கப்படுகிறது.

ஏனாம் பள்ளி மாணவர்களுக்கு உப்புமா- சட்னி, தக்காளி சாதம்-சட்னி, கிச்சடி-சட்னி, கோதுமை உப்புமா - சட்னி வழங்கப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள மொத்தம் 81,000 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என்றும், இந்த திட்டத்திற்காக புதுச்சேரி அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலாக ரூ.6 கோடி நிதி ஒதுக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.