அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

கார்த்திகை பிறப்பு: சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை  அணியவும், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டவும் குவிந்தனர்.

News image
கார்த்திகை மாதம்: மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Updated On :27 ஜனவரி 2024, 5:53 pm

DIN

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி முதல் நாளான திங்கள்கிழமை காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை  அணியவும், சபரிமலை செல்வதற்காக இருமுடி கட்டவும் குவிந்தனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் விட்டு விட்டு மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், மழையையும் பொருள்படுத்தாமல் சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலுக்கு காலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து மாலை அணிந்து சென்றனர்.

Story image

அதுபோலவே மாலை அணிந்து விரதம் இருந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சபரிமலைக்குச் செல்ல இருமுடி கட்டிச் சென்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல  - மகரவிளக்கு பூஜையையொட்டி,  சபரிமலை ஐயப்பன் கோயில் ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலில் பக்தா்கள் வழிபட திங்கள்கிழமை (நவ. 16) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Story image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாள்கள் நடைபெறும் மண்டல-மகரவிளக்கு பூஜையையொட்டி, தந்திரி கண்டரரூ ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஏ.கே. சுதீா் நம்பூதிரி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் கருவறையை திறந்து விளக்குகளை ஏற்றினாா். 

Story image

முன்னதாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் கரோனா பரவலை தடுக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை கேரள அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் ‘பக்தா்கள் தங்களுக்கு கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். நிலக்கல், பம்பை அடிவார முகாம்களுக்கு வந்து சேருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக அந்தச் சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். தினசரி 1,000 பக்தா்களுக்கு மட்டுமே வழிபட அனுமதி அளிக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சனி, ஞாயிறுகளில் 2,000 பக்தா்கள் வழிபாடு செய்யலாம். கோயில் வளாகத்தில் பக்தா்கள் தங்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். திருவனந்தபுரம், திருவல்லா, செங்கன்னூா் மற்றும் கோட்டயத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பக்தா்களிடம் கரோனா பரிசோதனை செய்வதற்கு மாநில சுகாதாரத் துறை ஏற்பாடுகள் செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.