சென்னையில் நாளை முதல் கால அட்டவணைப்படி புறநகர் ரயில் சேவை
நிவர் புயல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிவர் புயல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்காக சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக நேற்று காலை 10 மணி முதல் இந்த புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது புயல் கரையைத் கடந்த நிலையில் பிற்பகல் 03.00 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் சிறப்பு ரயில் என இயக்கப்பட்டது. இந்த நிலையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கான புறநகர் சிறப்பு ரயில் சேவை நாளை முதல் கால அட்டவணைப்படி வழக்கம்போல் இயக்கும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...