ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இடைவெளி விட்டுவிட்டு மிதமான தொடர்மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :29 நவம்பர் 2020, 9:59 am

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை இடைவெளி விட்டுவிட்டு மிதமான தொடர்மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அன்று காலை சுமார் 9.20 மணியளவில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. அடுத்ததாக சுமார் 11.30 மணியளவில் தொடர்ந்து சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது.

இப்பருவத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து பலவாரங்களாக நல்ல மழை பெய்து வருவதால் புறநகர் மற்றும்  சுற்றுவட்ட கிராமங்களில் ராபி பருவ விவசாயத்திற்கு மிக நல்ல சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், பயறுவகை சாகுபடி முடிந்து அடுத்தகட்ட  சாகுபடிக்கு விவசாயிகள் தங்கள் பணிகளைத் துரிதமாக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.