கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராகுல் கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

News image
ராகுல் கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Updated On :2 அக்டோபர் 2020, 10:16 am

DIN

ராகுல்காந்தி கைதைக் கண்டித்து அருப்புக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ராகுல் காந்தி கைதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட எஸ்சி பிரிவுத் தலைவர் ஜோதிமணி, நகரத் தலைவர் லஷ்மணன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ம.அய்யனார் ஆகியோர் தலைமை வகித்தனர். 

அப்போது உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினப் பெண் கடந்த 14-ம் தேதி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதற்குக்  கடுமையான கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும், அவ்விதம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு கண்டன முழக்கம் செய்தனர். உடன் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.