மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொல்லியல் படிப்பில் தமிழ் சேர்ப்பு: மு.க. ஸ்டாலின் வரவேற்பு

தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :9 அக்டோபர் 2020, 8:22 am

DIN

தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய தொல்லியல் துறை சாா்பில் உத்தரப்பிரதேசத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு எதிர்ப்பு எழுந்தது. கல்வித்தகுதியில் தமிழை சேர்க்கக்கோரி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.