மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமாவை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் 

சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமாவை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated On :12 அக்டோபர் 2020, 7:52 am

DIN

சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமாவை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சதிஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு நீதித்துறை பணியில் கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் சேர்ந்த பூர்ணிமா  தற்போது சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளராக இருந்து வருகிறார். இவர் சட்டக்கல்லூரிக்கு செல்லாமல் நேரடியாக தேர்வை  எழுதி சட்டப்படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், வழக்குரைஞராக பூர்ணிமா பதிவு செய்யும் போது தமிழ்நாடு பார் கவுன்சில் இதனை கண்டறிய தவறி விட்டது. மேலும், தற்போது சென்னை உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்பு பதிவாளராக பதவி வகிக்கும் பூர்ணிமா, பள்ளிப்படிப்பை முறையாக. முடித்ததற்கான ஆவணங்களும் இல்லை. எனவே அவரை அந்த பணியில் இருந்து  நீக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 10-ஆம் வகுப்பு படிக்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், பின்னர் மைசூரில் சட்டப்படிப்பை முடித்து பூர்ணிமா நீதித்துறை பணியில் சேர்ந்துள்ளார். எனவே தமிழக அரசின் அரசாணையின்படி பூர்ணிமா பதவியில் நீடிக்க தகுதியில்லை என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதிவுத்துறையிலிருந்து பெற்றப்பட்ட சான்றிதழ்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்பு பதிவாளர் பூர்ணிமா, கடந்த 1984-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பில் 711 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்து, அந்த சான்றிதழை காணொலியில் காட்டினர்.

இந்த வழக்கு மூலமாக நீதித்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக மனுதாரரான வழக்குரைஞர் சதீஷ்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அற்ப காரணங்களுக்காக வழக்குகள் தொடர்ந்துள்ளதாக கூறி , மனுதாரருக்கு ரூ.5 லட்சம்  அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், மனுதாரர் சதீஷ்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, வழக்கில் அக்டோபர் 20-ஆம் தேதி மனுதாரர் சதீஷ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடியும் வரை எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக ஆஜராகக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த மனு விசாரணைக்கு வரும் முன் பூர்ணிமாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கை செய்தியாக வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.