கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மருதூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி தொடக்கம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த  மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு  பயிர்க் கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
விவசாயி ஒருவருக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடன் தொகை.
Updated On :23 அக்டோபர் 2020, 9:20 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு முதல்கட்டமாக  226 பேருக்கு நிகழ் பருவக்கால நெற்பயிர் சாகுபடிக்கு ரூ. 64 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் மு.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கிச் செயலர் எஸ்.சேகர், கூடுதல் செயலர் அசோகன், இயக்குநர்கள் உதயம்.முருகையன், இந்திராணி சுப்ரமணியன், சா.இந்திரா, ப.சிங்காரவேல், கோபு, பிச்சக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.