மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல்லில் எஸ்.பி.பி திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

News image
நாமக்கல் மணிக்கூண்டு அருகில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு சம்மேளனத்தினர்.
Updated On :26 செப்டம்பர் 2020, 6:56 am

DIN



நாமக்கல்: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் எஸ்.பி.பி. உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட விடுதலை களம் அமைப்பின் தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார். 

மேலும் பாஜக நிர்வாகிகள் மனோகரன், இளங்கோவன், கலாசார ஆர்வலர் ஆர்.பிரணவ் குமார் மற்றும் இசைக்கலைஞர்கள்,  மேடைப் பாடகர்கள் பலர் கலந்து கொண்டு எஸ்.பி.பி-யின் உருவப்படத்துக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய தெலுங்கு சம்மேளனத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.