நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம்: தமிழகம் முதலிடம்
நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களுக்கான தேசிய விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.


சென்னை: நாட்டில் நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களுக்கான தேசிய விருதுப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டில் வறண்ட நிலப்பரப்புகளை அதிகம் கொண்ட மாநிலங்களாகக் கருதப்படும் மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நீர் மேலாண்மையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக, நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. நீர் மேலாண்மை சிறப்புப் பிரிவில் மிசோரம் முதலிடம் பிடித்துள்ளது.
தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்த சிறந்த மாவட்டங்களாக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன.
இதையும் படிக்கலாம்.. கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
தென்னிந்தியாவில் நீர் நிலைகளை பாதுகாப்பதில் சிறந்த மாவட்டமாக பெரம்பலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பழைய நீர்நிலைகளை புதுப்பித்து மேம்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளை சிறப்பாகக் கையாண்டதற்காக பெரம்பலூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆந்திரம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த மாவட்டங்கள் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.
நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீர் மேலாண்மையை கற்பித்து, மாணவ, மாணவிகளை ஊக்குவித்த பள்ளிகளுக்கான விருதப் பட்டியலில் புதுச்சேரியின் காட்டேரிக்குப்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.
இதையும் படிக்கலாமே.. நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் சமூக செயற்பாட்டாளர்: விருது பெற்ற கோவை இளைஞர்
நீர் மேலாண்மையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்ட தென்னிந்திய சமூக செயற்பாட்டாளர்களாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் முதல் பரிசையும், அண்ணா பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சக்திநாதன் கணபதி பாண்டியன் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...