தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

விழுப்புரத்தில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் முன்பு, பாமக சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற பாமக மக்கள் திரள் போராட்டம்.

Updated On :7 ஜனவரி 2021, 5:39 pm IST

விழுப்புரம் மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் முன்பு, பாமக சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர். புகழேந்தி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில அமைப்பாளர் முன்னாள் எம்பி தன்ராஜ் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாநிலத் துணைத் தலைவர்கள் அன்புமணி, ஹரிகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20% தனி இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். இதனையடுத்து காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தியிடம் மனு அளித்தனர். இதேபோல் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பும், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பும் மக்கள் திரல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகங்களில் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.