தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

திருவத்திபுரம்: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி அறவழிப் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மனு வழங்கும் போராட்டம் வியாழக்கிழமை திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்றது.

News image

திருவத்திபுரம்: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி அறவழிப் போராட்டம்

Updated On :7 ஜனவரி 2021, 5:03 pm IST

 
செய்யாறு: வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி மனு வழங்கும் போராட்டம் வியாழக்கிழமை திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் நடைபெற்றது.

வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு தனியாக 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி மூன்றாம் கட்டமாக அந்தந்தப் பகுதிகளில் நகராட்சிப் பகுதிகளில் மனு வழங்கும் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்திற்கு பாமக செய்யாறு நகர செயலாளர் விநாயகம் தலைமைத் தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்னை.சீனுவாசன், மாநில துணை தலைவர் மு.துரை. முக்கூர் ராமஜெயம், தி.க.காத்தவராயன், மண்ணப்பன், மாநில தொண்டர் அணி தலைவர் ஜெயசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வ. ஏழுமலை, கிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், அனக்காவூர் ஒன்றியக்குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார், துணைத் தலைவர் நாகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.  

இந்த அறப் போராட்டத்தின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவிகித இட பங்கீடு கேட்டு கோஷங்களை எழுப்பி கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நகராட்சி ஆணையாளர் பீரித்தியிடம்  பாமக நிர்வாகிகள் வழங்கினர். 

முன்னதாக செய்யாறு பெரியார் சிலையில் இருந்து காந்திசாலை வழியாக கட்டைக்கூத்து கலைஞர்கள் பங்கேற்ற  நடனத்துடன் ஆடி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் முழுக்கமிட்டவாறு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.