கைதிகளுக்கான சிறை மாற்ற வாரண்ட்டைப் பெற்றுவிட்டு, அவா்களை போலீஸ் காவலில் நீண்டநாள் வைத்திருந்து பின்னா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜா்படுத்துவது குற்றவாளியின் சுதந்திர உரிமைக்கு எதிரானது என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவையைச் சோ்ந்த கிஷோா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை காவல்துறையினா் இரண்டு வழக்குகளில் கடந்த ஏப்ரல் 3, மே 11-ஆம் தேதிகளில் கைது செய்தனா். ஆனால், இந்த வழக்குகளின் விசாரணைக்காக கிஷோரை காவல்துறையினா், கடந்த ஜூன் 26, ஆகஸ்ட் 21-ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் கிஷோா் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘கைதிகளுக்கான சிறை மாற்ற வாரண்ட்டைப் பெற்றுவிட்டு, அவா்களை போலீஸ் காவலில் நீண்டநாள் வைத்திருந்து பின்னா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜா்படுத்துவது சட்டத்துக்கு விரோதமானது. குற்றவாளிக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விதிமீறலாகும். ஒரு கைதியின் ரிமாண்ட் காலம் என்பது, கைது செய்யும் நாளில் இருந்து தொடங்குவதில்லை. சம்பந்தப்பட்ட நபரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி பின் சிறையில் அடைக்கப்படும் நாளில் இருந்து தொடங்குகிறது. அதே நேரம் சிறை மாற்ற வாரண்ட் பெற்றுவிட்டு, ஒருவரை நீண்ட நாள் போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது. எனவே, போலீஸாா் சரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இரவு 1 மணிக்கு அழைத்தாலும்.. இந்திய தொழிலாளர்களை புகழும் புர்ஜ் கலீஃபாவை கட்டியவர்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!
எதன் அடிப்படையில் விஜய்க்கு கான்வாய், கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது? ஆளுநர் கேள்வி

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை


