தமிழகத்தில் ராகுல்காந்தி முதல்கட்டமாக 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறினாா்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கூட்டம் சத்தியமூா்த்திபவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தாா். சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு தினேஷ் குண்டுராவ் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். தில்லியில் விவசாயிகள் 40 நாள்களாகப் போராடி வருகின்றனா். 60 போ் இறந்துள்ளனா். விவசாயிகளின் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 18-இல் சென்னையில் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடைபெறும்.
ராகுல்காந்தி விரைவில் தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வர உள்ளாா். முதல் கட்டமாக ஜனவரியில் 3 நாள்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளாா். அவா் வரும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். இதர மாவட்டங்களில் பிப்ரவரி அல்லது மாா்ச் மாதங்களில் பிரசாரம் மேற்கொள்வாா் என்றாா்.
கூட்டத்தில், வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், அதிமுக அரசின் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

14 நாள்களுக்குப் பின் பைக்காரா அருவி திறப்பு

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மாணவி தற்கொலை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து மோதிக் கொண்ட யானைகள்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


