தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கமா? சுகாதாரத் துறை பதில்
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்க வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சுகாதாரத் துறை தரப்பில், தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது. தேர்தலுக்குப் பிறகு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவுவது வதந்தியே. கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பொதுவிடங்களில் மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை மற்றும் அத்தியாவசியமற்றப் பணிகளுக்குத் தடை விதிப்பது போன்றவை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் கூடுமானவரை வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...