/

துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 3:17 pm

DIN

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.  
இந்த நிலையில் துரைமுருகன் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். 
அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.