தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

மேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

Published On :

மேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Story image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் முடிதிருத்தும் செய்யும் தொழிலாளியான இவருக்கு மாற்றுதிறனாளியான பாத்திமா மேரியை கடந்த 11 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பாத்திமா மேரி தனது கணவர் ராமச்சந்திரனுடன் தாயார் வீட்டில் வசித்து வருகின்றார்.

Story image

கணவனின் தாயார் அஞ்சலை மீதும் குடும்ப பிரச்னை எழுந்த நிலையில் கணவன் வீட்டார் கொடுமைப் படுத்துவதாகவும், கணவனின் வீட்டை தனக்கு மீட்டு தரக்கோரி மேலூர் 15 நாள்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று திடீரென மகளிர் காவல்நிலையம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் பாத்திமாமேரி  உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதனால் காவல்நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Story image

பின்னர் அங்கு பணியிலிருந்த காவல்துறையினர் துரிதமாக பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றித் தடுத்துக் காப்பாற்றினார். பின்னர் அங்கு வந்த மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜா அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மகளிர் காவல்நிலையம் முன்னே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.