அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்: முதல்வர்

அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (கோப்புப்படம்)

அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 8,72,415 தற்பொழுது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30,131 இறந்தவர்களின் எண்ணிக்கை 12,840 இதுவரை பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 2,02,58,000 தமிழ்நாடு முழுவதும் உள்ள பரிசோதனை நிலையங்கள் 260, இதில் அரசின் சார்பில் 69 தனியார் 191 தினசரி பரிசோதனை செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை 85,000. 8.4.2021 அன்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 4,226, குணமடைந்தோர் சதவீதம் 95.31, நோய்த்தொற்றினால் இறந்தவர்களின் சதவீதம் 1.40.
தமிழகத்துக்கு வரப்பேற்ற மொத்த தடுப்பூசிகள் 54,85,720, இதில் சேலத்திற்கு வரப்பெற்றது கோவிட் சீல்டு –2,45,800, கோ-வேக்ஸின் - 2,78,700. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 34,87,036 பேர் இதில் சேலத்தில் 1,91,461 பேர் தற்போழுது கையிருப்பில் உள்ளவை சுமார் 20,00,000 இதில் சேலத்தில் 97,000 தடுப்பூசிகள் உள்ளன.
தமிழகத்தில் மக்கள் தொகை சுமார் 8,26,00,000 பேர் இதில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 39,83,000 பேர், மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சதவீதம் 4.21 இதில் சேலத்தில் 4.0 சதவீதம். தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. 
போதுமான அளவு மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் கிட், மும்மடி முகக்கவசம், என் 95 மாஸ்க், பி.பி.இ.கிட், முழு உடல் கவசம், வெண்டிலேட்டர்கள் ஆகியவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.
ஏற்கனவே அரசு அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
தற்பொழுது கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுமுறைகளை தவறாமல் அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க வேண்டும்.
ஏற்கனவே அரசின் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லாமல் கொடுத்துள்ளோம். அரசு அறிவித்த வழிமுறைகளை முழுமையாக மக்கள் பின்பற்றினால் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு அதற்கு பின்னர் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com