இரண்டாவது கட்ட கரோனோ தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் முதல்வர் பழனிசாமி 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசியை வெள்ளிக்கிழமை இரவு எடுத்துக்கொண்டார்.
இரண்டாவது கட்ட கரோனோ தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் முதல்வர் பழனிசாமி 

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசியை வெள்ளிக்கிழமை இரவு எடுத்துக்கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 5,44 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9,20,827 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. 

அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடிமுதல் கட்ட கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதேபோல முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மார்ச் 11 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்டார்.

முதல் கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்டு நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசியை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு எடுத்துக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com