மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழக மக்களுக்கு ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
biden070617
Updated On :14 ஏப்ரல் 2021, 2:42 am

DIN

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இன்று முதல் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு நானும் எனது மனைவியும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வைஷாகி, நவராத்திரி, சங்ரான், விஷூ வாழ்த்துகள். வங்காளம், கம்போடியன், லியோ, மியான்மர், நேபாளம், சிங்களம் , தமிழ், தாய்லாந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.