சென்னையின் 5 மண்டலங்களில் கடுமையாக உயரும் கரோனா
சென்னையில் ஒட்டுமொத்தமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்கள் உள்பட 5 மண்டலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.


சென்னை: சென்னையில் ஒட்டுமொத்தமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலங்கள் உள்பட 5 மண்டலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒட்டுமொத்தமாக 21,391 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 8 சதவீதமாகும்.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் கரோனா பாதித்து இதுவரை 4,353 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டை, அண்ணாநகர், இராயபுரம், கோடம்பாக்கம், திருவிகநகர் ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று மிக அதிகமாக உள்ளது.
மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 21 ஆயிரமாக இருக்கும் நிலையில், இந்த 5 மண்டலங்களில் மட்டும் சுமார் 10,500 நோயாளிகள் இருக்கிறார்கள். எனவே, இந்த ஐந்து மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கைக்கொள்ள வேண்டும்.
மண்டலவாரியாக நிலவரம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...