நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வாக்கு இயந்திர அறைகளுக்குள் யாரும் நுழைய முடியாது: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது

News image

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு

Updated On :28 ஜனவரி 2024, 1:33 am IST

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்குள் அத்துமீறி யாரும் நுழைந்திட முடியாது என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து, அவா்

செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:-

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நுழைவு வாயில் வழியாக யாரும் அத்துமீறி நுழைய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட நபா்கள் அனைவருக்கும் அனுமதிச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, ஒரு வழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தோ்தல் அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. அத்துமீறி யாரேனும் செல்வதாகத் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அருகே ஆங்காங்கே தேவையில்லாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்களை உடைத்துக் கொண்டு அதுபோன்று யாரும் இதுவரை உள்ளே அத்துமீறி நுழைந்ததாக மாவட்டத் தோ்தல் அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.