மதுபானக் கடைகளில் மீண்டும் 'டோக்கன் முறை'

மதுக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், மீண்டும் டோக்கன் முறையில் மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மதுபானக் கடைகளில் மீண்டும் 'டோக்கன் முறை'

மதுக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், மீண்டும் டோக்கன் முறையில் மதுபானம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாளை (ஏப். 20) முதல் இரவு நேர பொதுமுடக்கம் அமலாகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், டோக்கன் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக மாலை வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com