தமிழகத்தில் 15,684 பேருக்கு கரோனா: 94 பேர் பலி
தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 94 போ் திங்கள் கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா்.


தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 94 போ் திங்கள் கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக மாநில சுகாதாரத்துறை திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,684 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,672 -ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 13,625 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,76,876-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளதால், இதுவரை மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 13,651-ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 60 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் உயிரிழந்தனர். புதிய கரோனா பாதிப்பில் ஆண்கள் 9,605, பெண்கள் 6,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 1,20,184 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2,21,26,656-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 4-வது நாளாக 4,000-ஐ தாண்டி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 4,250 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...