மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட தடை விதிக்க கோரிய மனு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன  திட்டத்தின் கீழ் வரக்கூடிய விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :28 ஏப்ரல் 2021, 7:17 am

DIN

சென்னை: பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன  திட்டத்தின் கீழ் வரக்கூடிய விவசாய நிலத்தில் தொழிற்சாலை கட்ட தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக மீட்பு இயக்கம் தாக்கல் செய்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் என்ற கிராமத்தில் அரவிந்த கேசவ் என்பவர் தனக்கு சொந்தமான 3.15 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடம் பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன  திட்டத்தின் கீழ் வரக்கூடிய விவசாய நிலம் என்பதால் இந்த இடத்தில் தொழிற்சாலை கட்ட தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், விவசாய நிலத்தில் கட்டுமானம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது. எனவே, கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்த அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் கட்ட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.