விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டியிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் பதுங்கிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய நாகப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

News image

வாழப்பாடி அருகே தண்ணீர் தொட்டியிலிருந்த நாகப்பாம்பு பிடிபட்டது

Updated On :2 ஆகஸ்ட் 2021, 10:08 am

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் பதுங்கிக் கொண்டு, மக்களை அச்சுறுத்திய நாகப்பாம்பை வனத்துறை ஊழியர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார். இவருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில், தூய்மைப்பணியாளர் சேட்டு  வீட்டிற்கு அருகே, தண்ணீர் தொட்டியில் நாகப்பாம்பு ஒன்று பதுங்கிக் கொண்டு, இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து  ஊராட்சி செயலர் குமரேசன், மாரியம்மன் புதூர் கிராம வனக்குழு தலைவர் உழவன் இரா. முருகன் வாயிலாக, வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் உத்தரவின்பேரில், பாம்பு பிடிப்பதற்கான பிரயோக பயிற்சி பெற்ற, வன தோட்டக்காவவர் முத்தையன் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார். இந்தப் பாம்பைக் கொண்டு சென்று கோதுமலை காப்புக்காடு வனப்பகுதியில் விட்டார். ஹ

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் பிடிபட்ட நாகப்பாம்பு.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் பிடிபட்ட நாகப்பாம்பு.

குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கொடிய விசமுடைய பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட வனக்காப்பாளர் முத்தையனுக்கு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.