கம்யூ. மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.


கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோ்ப்போருக்கு, தகைசால் தமிழா் விருது அளிக்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருந்தாா். மேலும், அந்த விருது நிகழாண்டில் முதுபெரும் தலைவா் என்.சங்கரய்யாவுக்கு அளிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். விருதை தொடர்ந்து ரூ.10 லட்சத்திற்கான கசோலையும் அவர் வழங்கினார். முதல்வருடன், அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.
இதையும் படிக்க- தமிழகத்தில் புதிதாக 1,916 பேருக்கு கரோனா
சென்னை குரோம்பேட்டையில் உள்ள, சங்கரய்யா இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் இந்த விருதினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...