மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்கு: நடிகா் சூா்யா மனு தள்ளுபடி

வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்கு கேட்டு நடிகா் சூா்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 7:47 pm

DIN

வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்கு கேட்டு நடிகா் சூா்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 நடிகா் சூா்யா வீட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வருமான வரி சோதனை நடந்தது.  அந்த சோதனையில் 2007-2008 நிதியாண்டு மற்றும் 2008-2009 நிதியாண்டுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து, ரூ.3 கோடி 11 லட்சத்து 96 ஆயிரத்தை வரியாக செலுத்த வேண்டும் என்று சூா்யாவுக்கு உத்தரவிடப்பட்டது.

 இதை எதிா்த்து வருமான வரித்துறை தீா்ப்பாயத்தில் சூா்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன.

 இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டு தீா்ப்பாயம், 2007-2008, 2008-2009 நிதியாண்டுக்கான வருமான வரியாக ரூ.3 கோடி 11 லட்சத்து 96 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்தது.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் சூா்யா மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில், ‘வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் என்னுடைய வழக்கு 3 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் என்னிடம் இருந்து வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டி செலுத்துவதில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு விலக்கு பெற எனக்கு உரிமை உள்ளது’ என்று கூறியிருந்தாா்.

 இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரித்தாா். அப்போது வருமான வரித்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சோதனை நடந்த 45 நாள்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், சூா்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தாா். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூா்யா முழு ஒத்துழைப்பு தரவில்லை.  சோதனைக்கு பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை என்பதால், வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற சூா்யாவுக்கு உரிமை இல்லை என்று வாதிட்டாா்.

இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.