விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா; 31 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தமிழகத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா
Updated On :18 ஆகஸ்ட் 2021, 2:01 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 31 பேர் உயிரிழந்தனர். 

நேற்று 1,804 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கரோனா குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,797 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 25,94,233-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 31 பேர் பலியாகியுள்ளனர். இது வரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,610-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,908 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,39,540-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 20,083 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் அதிக பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.