மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜக நிர்வாகிகளுடன் 3 நாள்கள் அண்ணாமலை ஆலோசனை

பாஜக நிர்வாகிகளுடன் நாளை முதல் 3 நாள்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்துகிறார்.

News image
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
Updated On :27 ஆகஸ்ட் 2021, 3:49 pm

DIN

பாஜக நிர்வாகிகளுடன் நாளை முதல் 3 நாள்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்துகிறார். பாஜகவின் அனைத்து அணிகள், பிரிவு நிர்வாகிகளுடன் சென்னை கமலாலயத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. 
முன்னதாக, பாஜகவில் சமீபத்தில் இணைந்த பத்திரிகையாளர் ஒருவரின் யூடியூப் சேனலில், பெண்கள் தொடர்பான கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது. 
இது தமிகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் அந்த விடியோவில், அண்ணாமலைக்குத் தெரிந்துதான் கே.டி. ராகவன் காணொலி வெளியிடப்படுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கே.டி. ராகவனின் பெண்கள் தொடர்பான சர்ச்சை விடியோவை யூடியூபர் தன்னிடம்  காட்டவில்லை, தான் பார்க்கவில்லை என அண்ணாமலை தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, விடியோவை வெளியிட்ட யூடியூபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், விடியோ வெளியிட்ட அவரின் சேனலையும் யூடியூப் நிறுவனம் முடக்கியது. இந்த நிலையில் பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.