பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாரா உள்ளிட்டோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
பாரா துப்பாக்கிச் சுடுதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ள அவனி லேகேராவுக்கு எனது வாழ்த்துகள். தாங்கள் படைத்துள்ள பெரும் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
வட்டு எறிதலில் வெள்ளி வென்றுள்ள யோகேஷ் கத்தூனியாவுக்கும்; ஈட்டி எறிதலில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள தேவேந்திர ஜாஜாரியா மற்றும் சுந்தர் சிங் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் வெள்ளியும், வட்டு எறிதல் போட்டியில் வினோத் குமார் வெண்கலமும் வென்றிருந்தனர். அவர்களுக்கும் முதல்வர் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

