கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

டிசம்பர் 4 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
டிசம்பர் 4 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
Updated On :2 டிசம்பர் 2021, 11:28 am

DIN

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, 

டிசம்பர் 4ஆம் தேதி மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், டிசம்பர் 5ஆம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகே, இதன் பாதையை துல்லியமாகக் கணிக்க முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டிசம்பர் 3ஆம் தேதி முதல் கடலோர ஆந்திர மாவட்டங்கள் மற்றும் கடலோர தெற்கு ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். 

இது புயலாக உருவானதும் இதற்கு ஜாவத் என்று பெயரிடப்படும். இது டிசம்பர் 4ஆம் தேதி காலை வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

YouTube video thumbnail

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, வியாழக்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி டிசம்பா் 4-ஆம்தேதி காலை நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.