தமிழறிஞர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர்
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

புலவர் செ.இராசு, மறைந்த தமிழறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான தொகையை அவர்களின் குடும்பத்தினரிடம் முதல்வர் வழங்கினார்.









