அன்று இரவு 7.30 மணியளவில் கீழத்தூவல் காவல்நிலையத்திலிருந்து மணிகண்டனை அவரது அம்மாவும், உறவினரும் அழைத்து வந்துள்ள நிலையில், 5.12.2021 அன்று அதிகாலை 3.30 மணியளவில் மணிகண்டன் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார். முதல் நாள் காவல்துறையினர் அழைத்துச் செல்கிற போது மிகவும் ஆரோக்கியமான உடல்நிலையுடன் சென்ற மணிகண்டன் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்து போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து மணிகண்டனின் பெற்றோர் கேட்டபோது, அவருக்கு முறையான விளக்கத்தை அளிக்காமல் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மணிகண்டனின் இறப்பு தற்கொலையாகவோ, பாம்பு கடித்ததாலோ தான் சம்பவித்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் எந்தவித
அத்துமீறல்களும் நடக்கவில்லை என காவல்துறை ஊடகங்களில் தன்னிச்சையாக வெளியிட்ட செய்திகளும் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது.