தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வரும் 18-ல் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 18ஆம் தேதி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
அமைச்சர் துரைமுருகன்
Updated On :12 டிசம்பர் 2021, 12:35 pm

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 18ஆம் தேதி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-12-2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சென்னை, “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலயது கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.