அதிக ஒமைக்ரான் பாதிப்பில் தமிழகத்திற்கு 3-வது இடம்
இந்தியாவில் அதிக ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.


இந்தியாவில் அதிகம் ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றால் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.(11 மணி நிலவரம்)
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, தில்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் 34, தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று(டிச.22) நிலவரப்படி தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. தற்போது 34 ஆக அதிகரித்து இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 3-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...