இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :2 பிப்ரவரி 2021, 5:55 am

DIN

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

நடப்பு ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணா் அரங்கில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார். 

இந்த நிலையில் ஆளுநர் உரையைத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார். இதையடுத்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின்னர் அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரை முடிவெடுக்க பலமுறை வலியுறுத்தியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாங்கள் வெளிநடப்பு செய்தோம்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.