நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதி ஊர்வலம்: திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்பு
நாமக்கல்லில் 52-ஆவது அண்ணா நினைவு தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.


நாமக்கல்: நாமக்கல்லில் 52-ஆவது அண்ணா நினைவு தின ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.
காலை 8 மணிக்கு சேலம் ரோட்டில் துவங்கி மோகனூர் சாலையில் அண்ணா சிலை நோக்கி அமைதி ஊர்வலமாகச் சென்று பிறகு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாமக்கல் நகர கட்சி பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலாளர் இராமலிங்கம், மாநில இலக்கிய அணி புரவலர் சி மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், ஒன்றிய செயலாளர் வி கே பழனிவேல், பார் கவுன்சில் கௌரவ செயலாளர் வழக்கறிஞர் அய்யாவு மற்றும் நிர்வாகிகள் திமுக முன்னோடிகள் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அமைதியாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...