45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

News image
பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிட மத்தியக் குழுவினர்.
Updated On :4 பிப்ரவரி 2021, 8:12 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழையால் ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதுதவிர நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தன.
 
இதுதொடர்பாக மத்திய குழுவைச் சார்ந்த மத்திய அரசின் மீன்வளத் துறை மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், மத்திய மின் துறையின் மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் ஷூபம் கார்க், சாலை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக மண்டல அலுவலர் ரணஞ்ஜெய் சிங் ஆகியோர்  வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

பட்டுக்கோட்டை அருகே நம்பிவயல் கிராமத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினரிடம் "சம்பா பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்குச் சாப்பாட்டுக்கு அரிசி கூட கிடைக்காது. கால்நடைகளுக்கு வைக்கோல் இருக்காது. எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ம.  கோவிந்த ராவ், வேளாண் துறை இணை இயக்குநர் அ. ஜஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.