விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி: மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் 12,110 கோடி தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இதன் மூலம் 16.13 இலட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
இதனையடுத்து ,முதல்வரின் அறிவிப்பினை வரவேற்கும் வகையில் மன்னார்குடியில் அதிமுகவினர் , கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடினர்.

பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கும் அதிமுகவினர்.
நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலர் கா. தமிழ்ச்செல்வம். மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் டி. மனோகரன் நீடாமங்கலம் ஒன்றிய செயலர் கோ.ஹரிகிருஷ்ணன், ஜெ .பேரவை மாவட்ட செயலர் பொன்.வாசுகி ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...