மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாளை தமிழகம் வருகிறார் சசிகலா: டிவிட்டரில் தொடங்கியது வரவேற்பு

​சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள வி.கே. சசிகலாவின் தமிழக வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 4:14 pm

DIN


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள வி.கே. சசிகலாவின் தமிழக வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமான ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தனிமையிலும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நாளை (திங்கள்கிழமை) தமிழகம் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ராஜமாதாவே வருக, சின்னம்மாவே வருக, தியாகத் தலைவியே வருக என்பது போன்ற வாசகங்களுடன் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. டிவிட்டரில் அவரை வரவேற்கும் விதமாக சின்னமாவை வரவேற்கும் தமிழகம், ராஜமாதா போன்ற ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.