மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார்: முதல்வர் பழனிசாமி பேச்சு

நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி பேசினார். 

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :7 பிப்ரவரி 2021, 7:11 am

DIN

நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால் நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி பேசினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். போரூரில் திறந்த வேனில் நின்று பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக கட்சியல்ல, அது கார்ப்பரேட் கம்பெனி. திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருகிறார். நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார்; ஆனால், நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார்.

Story image

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத கட்சி திமுக. அதிமுக ஆட்சியை எந்தக் காரணத்தாலும் திமுகவால் வீழ்த்த முடியாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக சார்பில் வாங்கபட்ட மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். 

Story image

தொடர்ந்து, அம்பத்தூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மத்தியில் பேசிய முதல்வர் இன்று ஆவடி, மீஞ்சூர், மாதவரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பரப்புரை மேற்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.