உத்தரகண்ட் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும்
உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.


உத்தரகண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது வரை 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையும் அப்பகுதிக்கு விரைந்துள்ளது.
இந்த நிலையில் உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி, அதன் காரணமாக உருவான வெள்ளம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீள வேண்டும் என விழைகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...