45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சசிகலா காரில் இருந்த அதிமுக கொடி அகற்றம்

சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :8 பிப்ரவரி 2021, 5:02 am

DIN

சசிகலா வந்த காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டதை அடுத்து அதிமுக கொடியுடன் கூடிய வேறு ஒரு காரில் சசிகலா பயணிக்கிறார். 

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.

பெங்களூருவில் இருந்து அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, காரில் உள்ள அதிமுக கொடியை போலீஸார் அகற்றினர். 

இதனால் சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணிக்கிறார். 

முன்னதாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜே ஆகும்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருததப்பட்டிருந்தது சர்ச்சையானது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக தரப்பில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.