மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதிமுக கொடியுடன் சென்னை புறப்பட்டார் சசிகலா

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.

News image
கோப்புப் படம்.
Updated On :8 பிப்ரவரி 2021, 2:49 am

DIN

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார்.
பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.
முன்னதாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆகும்போது சசிகலா காரில் அதிமுக கொடி பொருததப்பட்டிருந்தது சர்ச்சையானது. 
இதுகுறித்து அமைச்சர்கள் ஜெயக்குமார், சி. வி. சண்முகம் உள்ளிட்டோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சசிகலா காரில் அதிமுக கொடியை பொருத்த காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். 
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.